பட வாய்ப்புகளுக்காக நடிகை விசித்ரா எடுக்கும் புது அவதாரம்… | அஜித் ரசிகர்கள் கூட்டம்னா சும்மாவா?

 

பட வாய்ப்புகளுக்காக நடிகை விசித்ரா எடுக்கும் புது அவதாரம்… | அஜித் ரசிகர்கள் கூட்டம்னா சும்மாவா?

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி இடத்தை நோக்கிய எல்லா நடிகர்களின் பாதைகளும் பயணிக்கிறதோ அதே போல், லைம் லைட்டில் இருப்பதற்காக நடிகைகள் எடுக்கிற அவதாரங்கள் சொல்லி மாளாது. அரைகுறை ஆடைகளில் போட்டோசெஷன் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதில் ஆரம்பித்து, ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, அழிச்சாட்டியம் செய்கிற நடிகைகள் வரை ஒவ்வொருத்தரும் பப்ளிசிட்டியில் பின்னுகிறார்கள்.

பட வாய்ப்புகளுக்காக நடிகை விசித்ரா எடுக்கும் புது அவதாரம்… | அஜித் ரசிகர்கள் கூட்டம்னா சும்மாவா?

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி இடத்தை நோக்கிய எல்லா நடிகர்களின் பாதைகளும் பயணிக்கிறதோ அதே போல், லைம் லைட்டில் இருப்பதற்காக நடிகைகள் எடுக்கிற அவதாரங்கள் சொல்லி மாளாது. அரைகுறை ஆடைகளில் போட்டோசெஷன் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதில் ஆரம்பித்து, ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, அழிச்சாட்டியம் செய்கிற நடிகைகள் வரை ஒவ்வொருத்தரும் பப்ளிசிட்டியில் பின்னுகிறார்கள். ஆனாலும், சர்ச்சையில் பட்டையைக் கிளப்புவதில் சொல்வதெல்லாம் நிஜத்தை யாராலும் நெருங்க முடியவில்லை.

கமலின் அரசியல் வருகையில் ஆரம்பித்து, ரஜினி தும்முவதில் தொடர்ந்து, மழை வருமா வராதா வரைக்கும் கருத்துச் சொல்லி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நடிகை கஸ்தூரி இப்போது ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 
‘இதே ரூட்டை கெட்டியாகப் பிடிச்சுக்கலாம்’ என்று லேட்டஸ்டாக களமிறங்கி இருக்கிறார் நடிகை விசித்ரா.. ஆமாம்.. அதே தான்.. மீண்டும் படங்களில் நடிக்க ஆசை என்று சொல்லி புகைப்படங்களை விநியோகித்தும் டல்லடித்து வருகிற தமிழ் சினிமா விசித்ராவைக் கண்டுக் கொள்ளாததால் இப்போது கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

லேட்டஸ்டாக, தல அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’படத்தைப் பார்த்து விட்டு, ‘கட்டின பொண்டாட்டியா இருந்தாலும், அனுமதி இல்லாம தொடக் கூடாது ஓ.கே. அப்புறம் பப் போய் தண்ணி அடிச்சா பொண்ணுங்கள தொட லைசன்ஸா? ஒரு பொண்ணு இஷ்டம் இல்லைன்னா டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பண்ணு அது தான் புருஷ லட்சணம். தமிழ்நாட்டு ஆண்களுக்கு குறுகிய மனப்பான்மை இல்லாமல் இருந்தால் ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட் படம் தான்!’ என்று ட்விட்டரில் பொங்கியிருக்கிறார்.

வழக்கம் போல அஜித் ரசிகர்கள், விசித்ராவுக்கும் ஆதரவைத் தந்து உயர்த்தி விடுங்கப்பா… அந்த மனுஷன் ரசிகர் மன்றத்தைக் கலைச்சாலும் கலைச்சார்… அவரைத் தவிர அவருடைய ரசிகர்களை வெச்சு எல்லாருமே குளிர் காய்கிறார்கள்!