பட்டையை கிளப்ப வரும் ‘பேட்ட’ டிரைலர்!

 

பட்டையை கிளப்ப வரும் ‘பேட்ட’ டிரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது. அனிருத் இசையில் மரண மாஸான பாடல்கள், டீசரை தொடர்ந்து ‘பேட்ட’ படத்தின் டிரைலர் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மல்டி ஸ்டார் படமான ‘பேட்ட’ படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேட்ட படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ரஜினிஸம் பேசும் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.