பட்டுப் போன்ற பாதங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள்

 

பட்டுப் போன்ற பாதங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள்

பெரும்பாலான பெண்கள், அவர்களது முக அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகம் மட்டும் எப்போதும் பளிச்சென்று அழகாக இருந்தால் போதும் என்று அலட்சியமாய் உள்ளனர். ஆனால் கால் பாதங்களை சுத்தமாக வைத்திருப்போர் எல்லா விஷயத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது அனுபவங்களின் வெளிப்பாடு. ஒருவருடைய ஆரோக்கியத்தை தீர்மானிப்பது கால் பாதங்கள் தான்.  

பெரும்பாலான பெண்கள், அவர்களது முக அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகம் மட்டும் எப்போதும் பளிச்சென்று அழகாக இருந்தால் போதும் என்று அலட்சியமாய் உள்ளனர். ஆனால் கால் பாதங்களை சுத்தமாக வைத்திருப்போர் எல்லா விஷயத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது அனுபவங்களின் வெளிப்பாடு. ஒருவருடைய ஆரோக்கியத்தை தீர்மானிப்பது கால் பாதங்கள் தான்.  வீட்டிலிருந்து வெளியே சென்று வரும் போதும், உணவு சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவுவது போல் கால்களையும் சேர்த்து தான் கழுவ வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைப் போலவே, உடலின் வனப்பு பாதங்களில் தெரியும். 

 

leg toe

வெறும் பித்த வெடிப்புகள் மட்டுமே ஒருவரது கால் பாதங்களின் அழகை சீர்குலைப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாதது, கவலை என்று இன்னபிற விஷயங்களும் கால் பாதங்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் சீர்குலைக்கிறது. சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி வந்தாலே, எளிதில் பட்டுப் போன்ற பாதங்களைப் பெற்று விடலாம். தினந்தோறும் பத்து நிமிடங்கள் இதற்கென நேரம் செலவிட்டால் போதும்.
தினமும் குளிக்கும் சிரமம் பார்க்காமல், ஒரு ஐந்து நிமிடம் உங்களது பாதங்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி பிறகு ஈரம் இல்லாத துண்டால் துடைத்து சுத்தம் செய்யுங்கள். குளித்த பின் கால் பாதங்களில் ஈரம் காய்ந்தவுடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். 

leg toe

இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு பக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் பாதியளவு குளிர்ந்த நீரும், மற்றொன்றில் பாதியளவு மிதமான சுடு தண்ணீரும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் 5 நிமிடங்கள் சுடுதண்ணீரிலும், அடுத்த 5 நிமிடங்கள் குளிர்ந்த நீரிலும் கால்களை வையுங்கள். இப்படிச் செய்வதால் பாதங்களுக்கு மிருது தன்மையும், வசீகரமும் ஏற்படும். இரவில் நன்றாகத் தூக்கம் வரும். 
கால்களை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பவர்களுக்கு சேற்றுப்புண் , சொறி, பித்தவெடிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் விரல்களின் இடுக்குகளில் உலர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியையும், பொலிவையும் ஏற்படுத்தும். புதிதாக செருப்பு அணியும் போது செருப்பு கடித்தால் அந்த இடத்தில் பூண்டு அல்லது வெங்காயத்தை அரைத்து தேய்த்தால் குணம் காணலாம். பொதுவாக கால்களால் கடினமான பொருள்களை நகர்த்துதல் கூடாது. தினமும் உறங்கச்செல்வதற்கு முன் தேங்காய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து காலையில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் கால்வலி, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

 

leg toe

காலையில் செருப்பு அணியாமல் புற்களின் மேல் நடப்பது பாதங்களுக்கு நல்ல பயிற்சியாகும். அதனால் தான் கோயில்களில் கருங்கல் தரையில் பிரகார வலம் வருகிறோம். அப்படி நடந்து வருவதும்  பாதங்களுக்கு சரியான பயிற்சியாக இருக்கும்.