“பட்டாணி வளத்தில் வளர்ச்சி”…புது டிசைனால இருக்கு; அதிமுக தேர்தல் அறிக்கையை காலாய்க்கும் நெட்டிசன்கள்!

 

“பட்டாணி வளத்தில் வளர்ச்சி”…புது டிசைனால இருக்கு; அதிமுக தேர்தல் அறிக்கையை காலாய்க்கும் நெட்டிசன்கள்!

அதிமுக-வின் தேர்தல் அறிக்கை பிழையுடன் வெளியிடப்பட்டுள்ள விவகாரம், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது

சென்னை: அதிமுக-வின் தேர்தல் அறிக்கை பிழையுடன் வெளியிடப்பட்டுள்ள விவகாரம், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதனுடன் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், தங்களின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டார்.

admk manifesto

அதனைத்தொடர்ந்து, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

admk manifesto

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

admk manifesto

ஆனால், அதிமுக-வினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பக்கத்தில் பிழையுடன் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. “Peace, Prosperity, progress” அமைதி, வளம், வளர்ச்சி என்பதற்கு பதிலாக, “Pease, Prosperity, progress” என தவறாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. Pease என்றால் பச்சை பட்டாணி கடலை என்று அர்த்தமாகிறது. இது தற்போது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.