பட்டாசு வெடிக்க அனுமதி; வான வேடிக்கையுடன் கலைகட்டப் போகும் பூரம் திருவிழா?!

பட்டாசு வெடிக்க அனுமதி; வான வேடிக்கையுடன் கலைகட்டப் போகும் பூரம் திருவிழா?!

1798-ஆம் ஆண்டு முதல் பூரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்களின் சமூகம் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்த பண்டிகையில் பட்டாசு வெடிப்பது முக்கியமான அம்சமாகும் என திருவம்பாடி மற்றும் பரமேகாவு தேவஸ்தான அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

கேரளா, திருவம்பாடி மற்றும் பரமேகாவு தேவஸ்தானம் இணைந்து நடத்தும் பூரம் திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம்,  சுற்றுச்சூழலை பாதிக்காத விதத்தில் உள்ள வெடிகளை மட்டுமே மார்க்கெட்டில் விற்க வேண்டும். அதேபோல் தீபாவளி, பூரம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் எந்தெந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

பூரம்

1798-ஆம் ஆண்டு முதல் பூரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்களின் சமூகம் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்த பண்டிகையில் பட்டாசு வெடிப்பது முக்கியமான அம்சமாகும் என திருவம்பாடி மற்றும் பரமேகாவு தேவஸ்தான அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

பட்டாசு

இந்த வழக்கு, நீதிபதிகள் பாப்டே, மோகன் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், பூரம் விழாவில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: இரட்டை கொலை வழக்கில் பக்கத்துக்கு வீட்டு இளைஞர் கைது: விபரீத ஆசையால் நடந்த கொடூரம்!