பட்டாசு தொழில் நசுங்கி உள்ளது: வைகோ வேதனை

 

பட்டாசு தொழில் நசுங்கி உள்ளது: வைகோ வேதனை

சிவகாசி சாத்தூர் சுற்றி உள்ள பட்டாசு தொழில் மிகவும் நசுங்கி உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

விருதுநகர்: சிவகாசி சாத்தூர் சுற்றி உள்ள பட்டாசு தொழில் மிகவும் நசுங்கி உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சிவகாசி சாத்தூர் சுற்றி உள்ள பட்டாசு தொழில் மிகவும் நசுங்கி உள்ளது . பட்டாசு தொழிலை ஒழிக்கின்ற வகையில் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் வாதத்தை வைத்தது. பேரியம் அலுமினியம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கவே இயலாது. மத்திய அரசின் வழக்கறிஞர் பட்டாசு தொழிலுக்கு துரோகம் செய்து விட்டார் என்றார்.