பட்டாசு ஆலையில் தீ விபத்து: உடல் சிதறி ஒருவர் பலி..!

 

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உடல் சிதறி ஒருவர் பலி..!

தனி ஆலையிலிருந்த முத்துப்பாண்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆலை முழுவதும் பட்டாசு வெடித்து சிதறியதால், வெடிக்குத் தாங்காத கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பட்டாசு ஆலைகள் மும்முரமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களும் பட்டாசுகள் வாங்குவதற்குத் தொடங்கி விட்டனர். தீபாவளி நெருக்கத்தில் பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் வழக்கமாக வேலை செய்யும் நேரத்தை விடச் சிறிது நேரம் அதிகமாக வேலை செய்வர். 

Fireworks factory

விருதுநகர் மாவட்டத்தில் ஜமீன் சல்வார்பட்டியில் ரவீந்திரா என்ற பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். 60 தனித் தனி அறைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த ஆலையில், முத்துப் பாண்டி என்ற தொழிலாளி இன்று காலை அனைத்து தொழிலாளிகளும் வருவதற்குச் சற்று முன்னர் ஆலைக்குச் சென்று தனி அறையில் சங்கு சக்கர பட்டாசுக்கு மருந்து செலுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்து ஆலை முழுவதிலும் உள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன. 

Fireworks factory

அப்போது, தனி ஆலையிலிருந்த முத்துப்பாண்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆலை முழுவதும் பட்டாசு வெடித்து சிதறியதால், வெடிக்குத் தாங்காத கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அதில், உள்ளே சிக்கிக் கொண்ட முத்துப்பாண்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் ஆலைக்கு செல்லும் முன்னரே இந்த விபத்து நிகழ்ந்ததால் பேராபத்திலிருந்து தொழிலாளிகள் தப்பினர். 

Firework

அதிக உராய்வின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிவகாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.