பட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு!

 

பட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு!

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்கிறது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்கிறது.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விவசாயம், ரயில்வே என எந்த துறையிலும் எதிர்பார்த்த அளவுக்கு அறிவுப்புகள் வெளியாவததால் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மற்றும் தங்கம் இறக்குமதி வரியும் அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது, நெடுஞ்சாலை வரி ரூ.1, உற்பத்தி வரி ரூ.1 என லிட்டருக்கு ரூ.2 உயர்வு  உள்ளூர் வரிகளை சேர்த்து ரூ.2.50, ரூ.2.30 ஆக உயர்கிறது. இதேபோல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராம் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகவுள்ளனர்.