பட்ஜெட் விலையில் மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

பட்ஜெட் விலையில் மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த நிறுவனமான மொபிஸ்டார் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஆகும். பெயருக்கு ஏற்ற வகையில் ஃபுல் வியூ அளவில் நாட்ச் டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்.பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. எந்த தேதியில் இது சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

புதிய மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் வகைகள், 16 ஜிபி மற்றும் 32 ஜிபி மெமரி வகைகள், டூயல் சிம் ஸ்லாட், 13 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு ஆகிய மூன்று விதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 ஜிபி ரேம் மாடலின்  ரூ.8,499 என்றும், 3 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.9,499 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொபிஸ்டார் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஜியோ பயனர்கள் ரூ.2,200 கேஷ்பேக் சலுகையை பெற முடியும்.