பட்ஜெட் விலையில் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

பட்ஜெட் விலையில் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐடெல் நிறுவனம் ‘ஐடெல் விஷன் 1’ என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.799 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 மதிப்புள்ள கேஷ்பேக், 25 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. கிரேடியேஷன் புளூ மற்றும் கிரேடியேஷன் பர்ப்பிள் ஆகிய இரண்டு விதமான நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கிறது.

ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்பிளே, ஆக்டா-கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 8 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி செல்பி கேமரா, ஏ.ஐ பியூட்டி மோட், போர்டிரெயிட் மோட், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் வாட்டர் டிராப் நாட்ச் இருப்பது குறிப்பிடத்தக்கது.