பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | அல்வா கொடுக்கப் போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

 

பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | அல்வா கொடுக்கப் போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

இந்த மாசம் 5ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.  என்னவெல்லாம் அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் காத்திருக்குதுன்னு பேசறதுக்கு முன்னாடி பட்ஜெட் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை படிச்சுப் பார்க்கலாம் வாங்க! 

பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | அல்வா கொடுக்கப் போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

nirmala seetharaman

பட்ஜெட்  பற்றிய செய்தி என்றாலே, நமக்கு அதுக்கும் என்ன சம்மந்தம் என்று அடுத்த செய்திக்கு தாவ இருப்பவர்கள் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க… பட்ஜெட்ன்னு சொன்னாலே ஏதோ போரடிக்கிற விஷயம் கிடையாது. நாம தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள், நம்மை வெச்சு செய்கிற விஷயம் தான் பட்ஜெட். 

குழந்தைங்க கிட்ட ஒரு பொம்மை வாங்கித் தர்றோம். அவங்களுக்கு அதுக்கு ஆசையோட கலர் கலரா டிரெஸ் தைச்சு அழகுப்படுத்தறதில்லைய? அதுமாதிரி… என்ன சில முரட்டு குழந்தைங்க.. கொஞ்ச நேரம் விளையாடிட்டு கை, காலை எல்லாம் தனித்தனியா பிய்த்து போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிடும்.. அதுவும் நடக்கும் தானே… இந்த மாசம் 5ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.  என்னவெல்லாம் அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் காத்திருக்குதுன்னு பேசறதுக்கு முன்னாடி பட்ஜெட் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை படிச்சுப் பார்க்கலாம் வாங்க! 

budjet

ஒரு நாட்டின் பொருளாதாரத்தோட ஆணி வேராக இருக்கிறது பட்ஜெட் தான்.  அந்த பட்ஜெட் என்ற வார்த்தை, பிரெஞ்ச் மொழியில் இருந்து தான் உருவானது. பவ்கெட் என்கிற பிரெஞ்ச் வார்த்தைக்கு ‘தோல் பை’ என்று பொருள். பழங்காலத்தில் பட்ஜெட்  குறித்த பைல்களை தோல் பையில் பாதுகாப்பாகக் கொண்டு வந்து தாக்கல் செய்தார்கள். அதிலிருந்து தான், பட்ஜெட் என்ற வார்த்தை தோன்றியது.  ‘ஓபன் தி பட்ஜெட்’ என்று 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் நிதியமைச்சர் தனது உதவியாளரிடம் கூறினாராம். அன்றிலிருந்து அந்த வார்த்தையின் தொடக்கமாக மாறிவிட்டது என்பது வரலாறு. 

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதன்முறையாக 1947 ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார், முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது கையில் கொண்டு வந்த தோல் பையை வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். 

ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் தயாரிக்கும் போது, கூடவே அல்வாவையும் தயாரிப்பார்கள். அதிக அளவில் அல்வா கிண்டி, கிண்டிய அல்வாவை வடக்கு ப்ளாக்கில் பத்திரமாக எடுத்து வைப்பார்கள். அதன் பிறகு பட்ஜெட் தயாரிக்கும் பணி நடந்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அல்வாவை மத்திய நிதிஅமைச்சர், பட்ஜெட் தயாரிக்க உதவிய அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் கொடுப்பார். இந்த முறை எல்லோருக்கும் அல்வா கொடுக்கும் வாய்ப்பு முதல் முறையா நம்ம நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைச்சிருக்கு.

budjet

எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன்பாக இனிப்பு பரிமாறுவது இந்தியர்களோட கலாச்சாரம் தானே? அதன் அடிப்படையில் தான் தொன்று தொட்டு இன்று வரையில் பட்ஜெட் தயாரிக்கும் முன்பாக அல்வா கிண்டுகிறார்கள். ஆனால் எத்தனையோ இனிப்பு வகைகள் இருக்கும் போது, ஏன் குறிப்பாக அல்வா கிண்டிக் கொடுக்கிறார்கள் என்பதற்கான கேள்விக்கு பதில் இல்லை. (ஒரு வேளை சூசகமாக சொல்கிறார்களோ?)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஜவகர்லால் நேரு (1958), இந்திரா காந்தி(1970), ராஜீவ் காந்தி (1987) பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்கள். நேரு குடும்பத்தினருக்கு இந்த பெருமை கிடைச்சிருக்கு. அதே போல், இந்திய பிரதமர்களில் மூன்று பேர் மட்டும் தான், தங்களது பதவி காலத்தில் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள்  ஜவஹர்லால் நேரு ( 1958), இந்திரா காந்தி ( 1970) மற்றும் ராஜீவ் காந்தி (1987)

indira gandhi

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே பெண் நிதியமைச்சர் இந்திரா காந்தி மட்டும் தான். இந்திராகாந்தி 1970ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட் தான் அந்த சாதனையைப் பெற்றுள்ளது. 1977ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. இதை நிதியமைச்சர் ஹரிபாய் எம்.பட்டேல் தாக்கல் செய்தார். இது தான் இந்திய பட்ஜெட் வரலாற்றிலேயே மிகச்சிறிய உரையைக் கொண்டது.

ஏற்கெனவே இந்திராகாந்தி நிதி அமைச்சராக இருந்திருந்தாலும், முழுநேர நிதி அமைச்சராக இருக்கும் பெண்மணி இந்தியாவில் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்கிற பெருமையை பெறுகிறார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 39 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெண் நிதியமைச்சராக, பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

manmohan singh

இந்திய வரலாற்றில் பட்ஜெட்டே தாக்கல் செய்யாத நிதியமைச்சர் ஹேம்வந்தி நந்தன் பஹுகுணா.இதுவரை இந்தியாவில், நிதியமைச்சர்களாக இருந்த  நான்கு பேர், பிரதமர்களாகி உள்ளனர். அவர்கள் மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், மன்மோகன் சிங்.

இதுவரையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் இருவர் குடியரசுத் தலைவர்களாகவும் பதவி வகித்துள்ளனர். அவர்கள் வெங்கடராமன், பிரணாப் முகர்ஜி.

சரியாக கால் நூற்றாண்டு இடைவெளியில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. 1982-85 வரையில் 3 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்தவர், மறுபடியும் 2009ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

pranab mukerjee

சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் மத்திய அரசின் மொத்த செலவு ரூ.164 கோடியாகும். அதுவே 2019ம் ஆண்டில் மொத்த செலவு கிட்டத்தட்ட  ரூ.34 லட்சத்து ஆயிரத்து எழுநூறு கோடி ரூபாய்களாக உயர்ந்து நிற்கிறது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு, 1991-ல் மன்மோகன் சிங் கறுப்பு நிற பெட்டியை எடுத்து வந்தார். 1998 -99-ல் யஷ்வந்த் சின்கா கறுப்பு நிற  பையை  எடுத்து வந்தார். பிரணாப் முகர்ஜி,  சிவப்பு நிற பெட்டியை எடுத்து வந்தார். ப. சிதம்பரம்  அடர் சிவப்பு நிற பெட்டி, ப்ரவுன் நிற பெட்டி என்று எடுத்து வந்து புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தார். அருண் ஜெட்லி கறுப்பு நிற சூட்கேஸ் எடுத்து வந்தார். அதன் பின்னர்  அது, லேசான ஆரஞ்ச் வண்ணமாக மாறியது. தமிழ்நாட்டில் போன பட்ஜெட் சமயத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட சூட்கேஸ் காட்டி புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்து சிரித்தார்கள்.

budget

வருஷா வருஷம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு கொண்டு வரும் பெட்டிகளின் வண்ணங்கள் மாறினாலும், பட்ஜெட் பெட்டியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பாரம்பரியம் தொடரவே செய்கிறது.