பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பியூஸ் கோயல்

 

பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பியூஸ் கோயல்

2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று, நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

புதுடில்லி: 2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று, நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

2019-ஆம் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மருத்துவம், சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை பற்றி உரை நிகழ்த்தினார். இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி அமைச்சர், ராஷ்டிரபதி பவனிற்கு நேரில் சென்று குடியரசுத் தலைவரை  அழைப்பது வழக்கம். எனவே நேரில் சென்று தன்னுடைய அழைப்பை முன்வைத்தார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அமைந்திருக்கும் நிதி அமைச்சரவை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை இடைக்கால பட்ஜெட் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பியூஸ் கோயல் நிதி அறிக்கை உரையை வாசித்து வருகிறார்.