பட்ஜெட்டை மறந்து தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நிதியமைச்சர்… தந்தை இறந்தும் பணி செய்த அதிகாரி!

 

பட்ஜெட்டை மறந்து தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நிதியமைச்சர்… தந்தை இறந்தும் பணி செய்த அதிகாரி!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தந்தை இறந்தார் என்ற செய்தி வந்த பிறகும், பட்ஜெட் பத்திரங்களை அச்சடிக்கும் பணியை முடித்துவிட்டு புறப்பட்ட அதிகாரி குல்தீப் குமார் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தந்தை இறந்தார் என்ற செய்தி வந்த பிறகும், பட்ஜெட் பத்திரங்களை அச்சடிக்கும் பணியை முடித்துவிட்டு புறப்பட்ட அதிகாரி குல்தீப் குமார் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

parlioment

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பட்ஜெட் வேலைகள் மும்முரமாக நடந்துவரும் நேரத்தில் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அதில் எதிர்ப்பாளர்களை எல்லாம் சுட்டுக் கொல்வோம் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கி மிகக் கடும் நடவடிக்கை எடுத்தது தேர்தல் ஆணையம்.
துறை அமைச்சர் இப்படி இருக்க, அதிகாரி ஒருவர் தன்னுடைய தந்தை மரணத்துக்குக் கூட செல்லாமல் பட்ஜெட் பணியிலிருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

anuragh

பட்ஜெட் உரையின் முக்கிய ஆவணங்களை அச்சிடும் பணியில் இருந்தவர் குல்தீப் குமார் சர்மா. அரசு அச்சக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 26ம் தேதி தன்னுடைய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது, இவரது தந்தை காலமானார் என்று செய்தி கிடைத்துள்ளது. இருப்பினும் உடனடியாக அங்கிருந்து புறப்படாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துவிட்டு அவர் வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார். இவரது இந்த கடமை உணர்வை நிதித்துறை அமைச்சகம் பாராட்டி உள்ளது.

parliment

இது தொடர்பாக நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அச்சக மேலாளர் குல்தீப் குமார் சர்மா, ஜனவரி 26, 2020 அன்று தனது தந்தையை இழந்தார். எனினும் பட்ஜெட் கடமையிலிருந்ததால், அவர் தனது பணியைவிட்டு விலகாமல் அச்சகத்திலேயே தங்கியுள்ளார். அவருக்கு பெரும் இழப்பு இருந்தபோதிலும், சர்மா தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை, ஒரு நிமிடம் கூட அச்சுப் பகுதியை விட்டு வெளியேற முடிவு செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

பட்ஜெட் அச்சிடும் பணி 10 நாட்கள் நடக்கிறது. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் இந்த 10 நாட்களும் ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவது இல்லை. குல்தீப் குமார் வெளியேறாமல், அச்சகத்திலிருந்து தன்னுடைய பணியை நிறைவேற்றியதற்குப் பலரும் பரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.