பட்ஜெட்டுங்குற பெயர்ல காமெடி பண்ணிக்கிட்டு! நாங்களாம் ஐபேடில்  பட்ஜெட் தாக்கல் செய்வோம்- ப. சிதம்பரம்

 

பட்ஜெட்டுங்குற பெயர்ல காமெடி பண்ணிக்கிட்டு! நாங்களாம் ஐபேடில்  பட்ஜெட் தாக்கல் செய்வோம்- ப. சிதம்பரம்

வழக்கத்திற்கு மாறாக சூட்கேஸ்க்கு பதிலாக சிகப்பு துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார் நிர்மலா சீதாராமன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

வழக்கத்திற்கு மாறாக சூட்கேஸ்க்கு பதிலாக சிகப்பு துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார் நிர்மலா சீதாராமன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், “வருமான வரி கட்ட பான் கார்ட் இருந்த நிலையில், ஆதாரை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என சொன்னார்கள். இப்போது ஆதார் கார்டையும் வரி செலுத்த பயன்படுத்தலாம் என சொல்லுகிறார்கள். இது காமெடியாக இருக்கிறது. 

இந்த பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது. புள்ளிவிவரங்களில் எந்த வெளிபடை தன்மையும் இல்லை. மக்களிடம் இருந்து எதையோ மறைக்க பார்க்கிறது. வழக்கத்திற்கு மாறாக சூட்கேஸ்க்கு பதிலாக சிகப்பு துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட்டை கொண்டு வந்துள்ளார். எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர்கள் ஐபாட்டில் பட்ஜெட்டை கொண்டுவருவார்கள். சாமானியர்களுகு எதுவும் இல்லாத பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட் உள்ளது” என்று கூறினார்.