‘பட்ஜெட்டில் புதுச்சேரியை பாஜக அரசு புறக்கணித்துவிட்டது’ – நாராயணசாமி ஆவேசம்!

‘பட்ஜெட்டில் புதுச்சேரியை பாஜக அரசு புறக்கணித்துவிட்டது’ – நாராயணசாமி ஆவேசம்!

வங்கிகளைத் தனியார் மயமாக்குவதால் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பட்ஜெட்டில் புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘பட்ஜெட்டில் புதுச்சேரியை பாஜக அரசு புறக்கணித்துவிட்டது’ – நாராயணசாமி ஆவேசம்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “உலகிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுதொழில், நடுத்தர தொழில் செய்பவர்கள் என யாருக்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வங்கிகளைத் தனியார் மயமாக்குவதால் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. அந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

‘பட்ஜெட்டில் புதுச்சேரியை பாஜக அரசு புறக்கணித்துவிட்டது’ – நாராயணசாமி ஆவேசம்!

தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு புதிய திட்டமும் புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. பாஜக தேசிய தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வந்தபோது அதிக நிதி அளிப்போம், மூடப்பட்டுள்ள அலைகள், ரேஷன் கடைகளைத் திறப்போம் என்று அறிவித்திருந்தார். ஆனால் பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதன்மூலம் பாஜக அரசு புதுச்சேரியைப் புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது” என்றார்.