பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு…..காலணிகள், பர்னிச்சர்கள் விலை உயரும்…..

 

பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு…..காலணிகள், பர்னிச்சர்கள் விலை உயரும்…..

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் காலணிகள் மற்றும் பர்னிச்சர்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை உயரும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் காலணிகள் மற்றும் பர்னிச்சர்கள் மீதான இறக்குமதி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள் மீது ஹெல்த் செஸ் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர்கள்

இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால் காலணிகள், பர்னிச்சர்கள் விலை உயரும். அதேசமயம் ஹெல்த் செஸ் விதிக்கப்படுவதால் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகளின் விலை அதிகரிக்கும். அதேசமயம் இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தி மற்றும்  மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும்.

இதுதவிர  சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலையும் உயரும்.