படைப்பு சுதந்திரம் இல்லை, அதனால் நானாக விலகினேன்: இயக்குநர் பாலா அதிரடி விளக்கம்!

 

வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு  என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

சென்னை: வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு  என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’.  இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இதைத் தமிழில் ரீமேக் செய்ய  இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் இதன் உரிமையை பெற்றது. 

 

இந்த படத்தை பாலா இயக்க, விக்ரம் மகன் துருவ் இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக இருந்தார். தமிழில் ‘வர்மா’ என பெயரிடப்பட்டு இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து முடிந்தது. காதலர் தினத்துக்கு மறுநாள் ‘வர்மா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த வேளையில், திருப்தி இல்லாததால் இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம்  அறிக்கை வெளியிட்டிருந்தது.

bala

இந்நிலையில் இவ்விகாரம் குறித்து இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

bala

 

bala

படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக செய்துகொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை’  என்று பாலா தெரிவித்துள்ளார்.