படேல் பிறந்த நாளில் நடைமுறைக்கு வரும் புதிய யூனியன் பிரதேசங்கள் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக்

 

படேல் பிறந்த நாளில் நடைமுறைக்கு வரும் புதிய யூனியன் பிரதேசங்கள் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக்

சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் நடைமுறைக்கு வருகின்றன.

சுமார் 70 ஆண்டு கால காஷ்மீர் விவகாரத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த வாரம் முடிவுரை எழுதியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகைளை தூக்கி கொடுத்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரித்து 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.

பிரதமர் நரேந்திர மோடி

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசு நடவடிக்கையை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே எதிர்த்தன. ஆனால் பல கட்சிகள் மத்திய அரசுக்கு  ஆதரவு தெரிவித்தன. இதனால் அந்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதனையடுத்து காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

புதிய யூனியன் பிரதேசங்கள்

இதனையடுத்து, புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்தநாளன்று நடைமுறைக்கு வருகின்றன. அதாவது வரும் 31ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 

ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 மீதான விவாதத்தின் போது, நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோரை சம்பந்தப்படுத்தி பா.ஜ.வும், காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள்  ஆக்ரோஷமாக வார்த்தை போரில்  ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.