படு தோல்வி மட்டுமல்ல டெபாசிட்டையும் இழந்த மோடி…

படு தோல்வி மட்டுமல்ல டெபாசிட்டையும்  இழந்த மோடி…

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.

பயங்கர பில்ட் அப்பாக பி.ஜே.பியால் வைக்கப்பட்டிருந்த பிஎம் நரேந்திரமோடி படம் படுதோல்வி அடைந்திருப்பதுடன் போட்ட முதலீடுக்கும் நஷ்டம் வரும் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.

Oberoi

ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர், அவர் குழந்தைப் பருவத்திலிருந்தே எப்படிப்பட்ட தேசபக்தராக ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது. நரேந்திர மோடியின் நல்லப் பக்கங்கள் மட்டுமே படத்தில் பேசப்படுகிறது. அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தால் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டது மோடிக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய நன்மை. இப்படத்தை மக்கள் பார்த்திருந்தால் அவருக்கு இன்னும் சில சதவிகித வாக்குகள் குறைந்திருக்கும் என்று கிண்டலடிக்கும் வட இந்திய ஊடகங்கள் படத்துக்கு மிக மட்டமான ரேட்டிங்கையே வழங்கியுள்ளனர்.இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் இன்னும் தரைமட்டத்துக்கு வரும் என்றும் பி.ஜே.பியினர் கூட இப்படத்தை பார்க்க தியேட்டர் பக்கம் வருவதில்லை என்றும் சொல்கிறார்கள்.