படு ஆபாச காஸ்ட்யூமில் மோடியின் தியானத்தைக் கிண்டலடித்த பிரபல நடிகை…

 

படு ஆபாச காஸ்ட்யூமில் மோடியின் தியானத்தைக் கிண்டலடித்த பிரபல நடிகை…

தேர்தல் பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக பிரதமர் மோடி மேற்கொண்ட நீண்ட தியானம் பல சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில் லேட்டஸ்டாக இந்தி நடிகை ட்விங்கிள் கன்னாவும் தன் பங்குக்கு மரண கலாய் கலாய்த்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக பிரதமர் மோடி மேற்கொண்ட நீண்ட தியானம் பல சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில் லேட்டஸ்டாக இந்தி நடிகை ட்விங்கிள் கன்னாவும் தன் பங்குக்கு மரண கலாய் கலாய்த்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் இந்துக்களின் புனித ஸ்தலமான கேதார்நாத் சென்ற மோடி அங்குள்ள குகையில் நீண்ட நேர தியானத்தை மேற்கொண்டு தனது மதப்பற்றை பிரச்சாரம் செய்தார். பின்னர் அவரது குட்டு மெல்ல வெளிப்பட்டு அது ஒரு பயங்கர செட் அப் என்றும் அவர் தியானம் மேற்கொண்ட இடம் இயற்கையான குகை அல்ல ஒரு எண்டெர்டெயின்மெண்ட் விடுதியில் இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் கொண்டது என்பது தெரிந்தது. இதற்காக இந்தியா முழுவதிலிமிருந்தும் அநியாயத்துக்குக் கலாய்க்கப்பட்டார் மோடி.

அவரது தியானம் தொடர்பாக லட்சக்கணக்கில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. மோடியின் தியானப் படங்களுடன் வடிவேலு,யோகி பாபு,கவுண்டமணி, செந்தில் போன்றவர்கள் பக்கத்தில் அமரவைக்கப்பட்டு சூப்பரான பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் லேட்டஸ்டாக மோடியின் தியானத்தை பாலிவுட் நடிகை ட்விங்கிள் கன்னா கிண்டல் அடித்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் “கடந்த சில நாட்களாக நிறைய ஆன்மீக போட்டோக்களை பார்த்துவிட்டோம். இப்போது நானும் தியானம் செய்வது போட்டோ எடுப்பது எப்படி, போஸ் கொடுப்பது எப்படி என்பது பற்றி பயிலரங்கு நடத்தப்போகிறேன். எல்லோரும் அதில் கலந்துகொள்ளுங்கள். திருமணத்தில் போட்டோ எடுக்கும் தொழிலுக்கு அடுத்து இதுதான் பெரிய தொழிலாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் பெயர் ‘தியான போட்டோகிராபி – போஸ்களும் கோணங்களும்” என பதிவிட்டுள்ளார்.

இப்பதிவில் பக்கத்தில் நாய் பொம்மை, பேண்ட் அணியாமல் வெறுமனே சட்டை மட்டுமே போட்டிருப்பது போன்ற ட்விங்கிள் கன்னாவின் குறியீடுகள் மட்டும் பிடிபடவில்லை.