படுதோல்வியடைந்தாலும் மீண்டும் போட்டி! சூடு பிடிக்கும் அரசியல் களம்!

 

படுதோல்வியடைந்தாலும் மீண்டும் போட்டி! சூடு பிடிக்கும் அரசியல் களம்!

கர்நாடகத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட்டு வெற்றியை ஈட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. என்பதைப் போல தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், மீண்டும் அதே உற்சாகமுடன் அடுத்து வருகின்ற தேர்தலில் போட்டியிட கிளம்புவது எல்லா மாநிலத்திலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த செய்கின்ற வேலை தான். ஆனால், இதில் கர்நாடக அரசியல் களம் வேறு வகையில் சூடுபிடித்திருக்கிறது. தமிழகத்தைப் போலவே, கர்நாடகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிற பாஜகவுக்கு அங்கேயும் நிலையான ஆட்சி கிட்டவில்லை. இந்நிலையில், பாஜக உபயோகிக்கும் அஸ்திரங்கள் எல்லாம் செயல் இழந்த நிலையில், அடுத்து வருகிற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நம்பிக் காத்திருக்கிறது பாஜக.குமாரசாமி

கர்நாடகாவில் 15 தொகுதிகளிலும் நடைப்பெற இருக்கும் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும். காங்கிரஸூடனான கூட்டணியில் பல துயரங்களை அனுபவித்து வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு இந்த முறை அது போன்ற எதுவும் நடைபெற கூடாது என்று அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சியை வி்ட்டு விலகுவதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்த நிலையில் அங்கு அம்மாநில அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியை சந்தித்தது. அதன்பின் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். அதிலிருந்து பல சிக்கல்களை  அவர் சந்தித்து வந்தார். தேவ கவுடா

மஜத-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் பதவி அளிக்காத காரணத்தால்  அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் எடியூரப்பாவை விமர்சித்து வந்தனர். 

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிதி திரட்ட மிகவும் போராடினார் எடியூரப்பா.பல்வேறு சிக்கல்களை ஆட்சி அமைத்ததிலிருந்து சந்தித்து வரும் அவரை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்த ஆட்சி கண்டிப்பாக கவிழும் என்று விமர்சித்து வந்தார். 

இதற்கிடையே காங்கிரஸுடன் கூட்டணியை முறித்த கொண்டது மதசார்பற்ற ஜனதா தளம். ஆகையால் இப்போது நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட்டு வெற்றியை ஈட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.