படுக்கையறை ரகசியத்தை போட்டுடைத்த மகத் மனைவி பிராச்சி

 

படுக்கையறை ரகசியத்தை போட்டுடைத்த  மகத் மனைவி பிராச்சி

யாஷிகாவால் மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் மகத் . பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது. தற்போது மகத்   கெட்டவனு பேர் எடுத்தா நல்லவன், இவன் தான் உத்தமன் என்ற படங்களில் நடித்து வருகிறார். யாஷிகாவால் மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

 

இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை உறுதி செய்தார்.  

 

இதையடுத்து  கடந்த ஏப்ரல் மாதம்  பெற்றோர் சம்மதத்துடன் மகத்துக்கும்  பிராச்சிக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி  மகத் மற்றும் பிராச்சி மிஷ்ரா இருவருக்கும்  மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம்   நடந்தது. இதில் நடிகர் சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ttn

இந்நிலையில் திருமணத்திற்கு இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள இந்த  ஜோடி பேசும் போது, ‘நாங்கள் கோகோ என்ற செல்ல பிராணி நாயை வளர்த்து வருகிறோம். நான் கல்யாணத்துக்கு முன்னாடி அவனை தான் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவேன். தற்போது எங்களுக்கு நடுவே அவன் தான் தூங்குகிறான். நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது  என் மீது சூடான மூச்சுக்காற்று படும். மகத் தான் என்று எழுந்து பார்த்தால்  கோகோ தான் தூங்கிட்டு இருப்பான் என்று கூறியுள்ளார் பிராச்சி.