படிப்பா… ஹாலிவுட்டா? ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று திணறும் ரொனால்டோ! 

படிப்பா… ஹாலிவுட்டா? ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று திணறும் ரொனால்டோ! 

ஃபுட்பால் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் நாட்டின் ரொனால்டோ. 34 வயதான இவர் சமீபத்தில் துபாயில் ஈ.எஸ்.பி.என் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரிடம் ஃபுட்பாலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், “என்னுடைய உடல் களத்தில் போராடத் தயாராக இல்லை என்று எப்போது உணர்கின்றேனோ, அப்போதே ஓய்வு பெற்றுவிடுவேன். ஒரு காலத்தில் ஃபுட்பாலில் ஓய்வு பெறும் வயது என்பது 30. 32 என்று இருந்தது. தற்போது சில வீரர்கள் 40 வயதிலும் விளையாடுவதைக் காண்கின்றீர்கள்.

கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு படிப்பை தொடர்வதா அல்லது ஹாலிவுட் படத்தில் நடிப்பதா என்று யோசித்து வருவதாக பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ கூறியிருக்கிறார்.
ஃபுட்பால் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் நாட்டின் ரொனால்டோ. 34 வயதான இவர் சமீபத்தில் துபாயில் ஈ.எஸ்.பி.என் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரிடம் ஃபுட்பாலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், “என்னுடைய உடல் களத்தில் போராடத் தயாராக இல்லை என்று எப்போது உணர்கின்றேனோ, அப்போதே ஓய்வு பெற்றுவிடுவேன். ஒரு காலத்தில் ஃபுட்பாலில் ஓய்வு பெறும் வயது என்பது 30. 32 என்று இருந்தது. தற்போது சில வீரர்கள் 40 வயதிலும் விளையாடுவதைக் காண்கின்றீர்கள்.
ஓய்வுக்குப் பிறகு மிகவும் சினிமா போன்ற சவாலான விஷயங்களை எதிர்கொள்ள விரும்புகிறேன். திரைப்படத்தில் நடிப்பது என்பது என்னைக் கவர்ந்திழுக்கும் விஷயமாக உள்ளது.  என்னுடைய ஓய்வுக்குப் பிறகு விட்டுப்போன என்னுடைய படிப்பை தொடரவும் ஆசை உள்ளது.
ஃபுட்பால் மீது நான் கொண்ட காதல்தான் நான் பெற்ற இத்தனை விருதுகளுக்கும் காரணம். என்னுடைய வெற்றிக்கு எந்த ஒரு அதிசயமோ, அற்புதமோ காரணம் இல்லை. எந்த ஒரு வெற்றிக் கதைக்குப் பின்னாலும் அதிசயம், அற்புதம் காரணமாக இருந்திருக்காது. நம்முடைய ஆர்வம், அர்ப்பணிப்புதான் நம்முடைய வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. நான் எப்போதுமே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடுகிறேன்” என்றார்.

8″>