படித்த இளைஞர்கள் அரசு வேலை  எதிர்ப்பார்ப்பதை விட்டுவிட்டு சுய தொழில் செய்யுங்கள் – அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்

படித்த இளைஞர்கள் அரசு வேலை  எதிர்ப்பார்ப்பதை விட்டுவிட்டு சுய தொழில் செய்யுங்கள் – அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்

படித்த இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்த்திருப்பதற்கு பதில் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

படித்த இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்த்திருப்பதற்கு பதில் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தங்க சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவை துப்புறவுப் பணியாளர் பணிகளுக்கு முதுநிலை பட்டம் படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். அரைக்காசு வேலையாக இருந்தாலும் அரசாங்க வேலையாக இருக்க வேண்டும் என இளைஞர்கள் நினைக்கின்றனர்.

jayakumar

மற்றப்படி தமிழகத்தில் வேலையின்மை நிலையெல்லாம் இல்லை. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் நிச்சயம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இளைஞர்கள் தான் படித்த படிப்புக்கு தான் வேலைக்கு போவேன் என சொல்வதையும், அரசு வேலை எதிர்பார்ப்பதையும் விட்டுவிட்டு சுயதொழில் செய்ய முன்வர வேண்டும்” என்று கூறினார்.