படிக்காத முருகனின் பலே திருட்டு சாமர்த்தியம்.. வழிகாட்டிய போலீஸ் அதிகாரி!

 

படிக்காத முருகனின் பலே திருட்டு சாமர்த்தியம்.. வழிகாட்டிய போலீஸ் அதிகாரி!

தமிழகத்தையே அதிர்ச்சியில் வாயைப் பிளக்க வைத்த திருட்டாக இருந்தது திருச்சியில் லலிதா ஜுவல்லரியில் நடைப்பெற்ற திருட்டு. இந்த வழக்கில் கைதான முருகனை விசாரித்த போது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த கும்பல் என தெரிய வந்து உற்சாகத்தில் மிதந்தனர் போலீசார்.

தமிழகத்தையே அதிர்ச்சியில் வாயைப் பிளக்க வைத்த திருட்டாக இருந்தது திருச்சியில் லலிதா ஜுவல்லரியில் நடைப்பெற்ற திருட்டு. இந்த வழக்கில் கைதான முருகனை விசாரித்த போது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த கும்பல் என தெரிய வந்து உற்சாகத்தில் மிதந்தனர் போலீசார்.  கர்நாடக வங்கியில் 150 கிலோ தங்கம், சென்னையில் 20 வீடுகளில் கொள்ளை, மதுரை அடகுக்கடையில் 1,500 பவுன் கொள்ளை என பல வழக்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள், திருச்சியில் கொள்ளையடித்ததில் சிக்கிக் கொண்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து, உருக்கி விற்று இருக்கிறார்கள். அப்படி கிடைத்த பணத்தில் சினிமா தயாரிப்பு, நடிகைகளுடன் உல்லாசம், ஆதரவற்றோர் பள்ளிக்கூடம், அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூரில் சொகுசு பங்களா என்று வாழ்ந்திருக்கிறார்கள். 

murugan

இத்தனைக் கொள்ளைகளையும் சாமர்த்தியமாக செய்து வந்த முருகன், எப்படி இவ்வளவு காலம் போலீசில் சிக்காமல் இருந்தான் என்பது குறித்து விசாரித்த போலீசார் அதிர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்த உடன், தனது சொகுசு வேனில், சுற்றுலா பயணிகளைப் போல குடும்பத்துடன் சுற்றுலா சென்று விடுவதாக விசாரணையில் சொல்லியிருக்கிறான் முருகன். இதற்காக சொகுசு வேனிலேயே நகைகளை எடைப் போடும் மெஷின் எல்லாம் வைத்திருக்கிறான். அங்கேயே நகைகளை உருக்கியும், விற்றும் இருக்கிறான். தற்போது சொகுசு கார்களையும், சொகுசு வேனையும் கைப்பற்றியிருக்கிறார்கள். 
நடிகைகளுடன் உல்லாச வாழ்க்கை, குவித்த ஏராளமான சொத்துக்கள், பினாமிகள் சொத்துக்கள், போலீசாருக்கு கொடுத்த லஞ்ச பணம், கார் ஆகியவை குறித்து 3 பேரும் மாறி, மாறி தகவல்களைச் சொல்லி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த 22 கிலோ நகைகள் மீட்கப் பட்ட நிலையில், உருக்கிய நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.