’படிக்காதவன்’ பட அம்பிகா டெக்னிக், அங்கேயும் ஒரு லஷ்மி கைகொடுக்கிறது!

 

’படிக்காதவன்’ பட அம்பிகா டெக்னிக், அங்கேயும் ஒரு லஷ்மி கைகொடுக்கிறது!

ஸ்கேனில் தெரிந்தது தையல் காயம் மட்டுமல்ல, தையலுக்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த திரவ வடிவ போதைப்பொருள். படிக்காதவன் படத்துல அம்பிகா சாராய பாட்டிலை வைத்துல வச்சு ரஜினியை ஏமாத்துற மாதிரி என்னையை ஏமாத்தப் பாக்கியா? எனக் கேட்டு தரதரவேன இழுத்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்.

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் எல் டராடோ விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு சின்ன பிரச்னை. விமானத்தில் வந்திறங்கிய ஒரு பெண் பயணி நடக்க முடியாமல் நடந்துவந்தார். ரொம்ப வயசானவங்க எல்லாம் இல்ல, ஆனாலும் உடல் சோர்ந்தவாக நடந்துவருகிறார். அதிகாரிகள் கரிசனையோடு வீல் சேர் வேணுமா மேடம், கால் டாக்சி புடிக்கட்டுமா, என் கார்லயே கொண்டுவந்து வீட்ல விடட்டுமா என ஒவ்வொரு அதிகாரிகளாக அக்கறையோடு விசாரிக்க, ஒரே ஒரு அதிகாரிக்கு மட்டும் ஏதோ தவறாகப் பட்டது. அந்தப் பெண்ணிடம் போய், என்னம்மா பிரச்னை, ஏன் தடுமாறி நடக்குறீங்க என கேட்க, அதற்கு அப்பெண், காலில் தனக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டிருப்பதாகவும், அது வலி கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

El dorado airport

அதிகாரியும் உடனே, ”ஆப்ரேஷன் பண்ணின இடத்துல தையல் ஏதும் பிரிஞ்சிருக்கப் போகுது, எங்ககிட்ட ஒரு ஸ்கேனிங் மிஷின் இருக்கு, ஆபத்துக்கு பாவம் இல்ல, அந்த ஸ்கேனிங் மிஷின்ல செக் பண்ணினா காயம் எப்புடி இருக்குன்னு தெரிஞ்சுடும், நாம நேரா ஆஸ்பிட்டலுக்கே போயிடலாம்” என கனிவோடு சொல்ல, அந்த பெண் பதறிபோய்விட்டார். ”ஐயய்யோ உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம், அதுவும் இல்லாம வியாழக்கிழமை நான் சாய்பாபா விரதம், ஸ்கேன் மிஷின் பக்கத்துல்ல எல்லாம் போகக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரி பெண்ணை ஸ்கேன் மிஷின் அறைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்துவிட்டார். ஸ்கேனில் தெரிந்தது தையல் காயம் மட்டுமல்ல, தையலுக்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த திரவ வடிவ போதைப்பொருள். படிக்காதவன் படத்துல அம்பிகா சாராய பாட்டிலை வைத்துல வச்சு ரஜினியை ஏமாத்துற மாதிரி என்னையை ஏமாத்தப் பாக்கியா? எனக் கேட்டு தரதரவேன இழுத்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்.