படிக்கட்டில் ஆடி காரை ஓட்டிய உபேர் டிரைவர்: வைரல் வீடியோ!

 

படிக்கட்டில் ஆடி காரை ஓட்டிய  உபேர் டிரைவர்: வைரல் வீடியோ!

ஆன்லைனில் உணவு முதல் கார் வரை எல்லாம் சர்வசாதாரணமாகக் கிடைத்து வருகிறது.

ஆஸ்திரேலியா: உபேர் கேப் ஓட்டுநர் ஒருவர் கூகுள்மேப்பை பார்த்துக்கொண்டே படிக்கட்டுகளில் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆன்லைனில் உணவு முதல் கார் வரை எல்லாம் சர்வசாதாரணமாகக் கிடைத்து வருகிறது. செல்வந்தர்களுக்கே உரித்தான கார் பயணம்  தற்போது சாமானிய மக்களும் அனுபவித்து வருகின்றனர். அதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பலருக்கும் உபேர், ஓலா போன்ற வாடகை  கார் வசதிகள் ஏதுவாக அமைந்துள்ளது. பேரம் பேசாமல் செல்லும் இந்த பயணத்தைப் பலரும் விரும்புகின்றனர்.  வாகன ஓட்டுநர்களும் கூகுள் மேப்களை பார்த்துச் சென்று விடுகின்றனர். இதில் பாதுகாப்பற்ற முறை  இருந்தாலும் அவை பெரும்பாலானவர்களின் கண்களில் புலப்படுவதில்லை. 

 

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் போண்டி நகரில்  உபேர்  கேப் ஓட்டுநர் ஒருவர் கூகுள்மேப்பை பார்த்துக்கொண்டே போக்குவரத்து வழி என நினைத்து  படிக்கட்டுகளில் ஆடி காரை  ஓட்டி பரபரப்பைக் கூட்டியுள்ளார். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது.