படம் மட்டுமில்ல பாட்டுலையும் அடிச்சிக்க முடியாதுங்க… 

 

படம் மட்டுமில்ல பாட்டுலையும் அடிச்சிக்க முடியாதுங்க… 

விஜய்யின் கேரியரில் எந்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேந்தாலும் அவரின் பாடல்கள் ஹிட் தான் என்பதில் சந்தேகமே இல்லை. இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் தொடங்கி தேவிஸ்ரீ பிரசாத், அனிருத் வரை எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும் விஜய் படங்களின் பாடல்கள் ஹிட் ஆவது வரலாற்றில் மாறாத விஷயமாகவே உள்ளது. 

விஜய்யின் கேரியரில் எந்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேந்தாலும் அவரின் பாடல்கள் ஹிட் தான் என்பதில் சந்தேகமே இல்லை. இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் தொடங்கி தேவிஸ்ரீ பிரசாத், அனிருத் வரை எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும் விஜய் படங்களின் பாடல்கள் ஹிட் ஆவது வரலாற்றில் மாறாத விஷயமாகவே உள்ளது. 

vijay

இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை என்ற துள்ளாத மனமும் துள்ளும் பாடல் தொடங்கி சர்காரில் வரும் ஒருவிரல் புரட்சி வரை விஜயின் 95 சதவீத பாடல்கள் ஹிட்டோ ஹிட்டுதான். 

ஒரு படம் வெற்றிப்பெற வேண்டுமானால் அந்த படத்தின் பாடல்கள் அதிரவேண்டும். படத்திற்கு முக்கிய பலமே பாடல்கள் தான். படத்தை இயக்க ஒரு இயக்குநர் என்ன பாடு படுகிறாரோ அந்த அளவிற்கு இசையமைப்பாளரும் கஷ்டப்படுகிறார். ஹீரோக்களின் ரசிகர்களுக்கு ஏற்ப மெட்டுகளைப்போட்டு அதிரவைக்கின்றனர். விஜய் நடித்த பழைய படங்களில் தேவாவின் இசையில் வருடிய பாடல்கள் அத்தனையும் மாஸ்தான். தேவா, விஷ்ணு, குஷி, ரசிகன், பகவதி, ஒன்ஸ் மோர், மாண்புமிகு மாணவன் என தேவா- விஜயின் வெற்றிக்கூட்டணி தொடர்ந்தது.

vijay

குறிப்பாக  ஊட்டி மலை பியூட்டி, விஜயின் குரலில் ஒலித்த தொட்டப்பெட்டா ரோட்டு மேல முட்ட பரொட்டா, கட்டிப்புடி கட்டிப்புடிடா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜயின் நடிப்புக்காகவும், பாடலுக்காகவுமே படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடின.  இதையடுத்து இளையராஜவின் காலங்கள் தொடங்கின… காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, ராஜாவின் பார்வையிலே, சந்திரலேகா ஆகிய ஐந்து பாடல்களுக்கு இளையராஜா இசைமைத்தார். இந்த படங்களில் என்னை தாலாட்டா வருவாயா…. ஆனந்த குயிலின் பாட்டு ஆகிய படங்கள் ஹிட் அவதாரத்தினை எடுத்து ரசிகர்களை குதூகலப் படுத்தியது. இதன்பின் புதிய கீதை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா எண்ட்ரிக் கொடுத்தார். இந்த படத்தில் வரும் வசியகாரி வசியகாரி வலைய வீசி போறாளே….. அண்ணா மலை தம்பி இங்கு ஆட வந்தேன் டா ஆகிய பாடல்கள் அனைத்து பள்ளி  ஆண்டுவிழாக்களிலும் ஒளிக்க தவறியதில்லை. அதன்பின் சிவகாசி படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசைமையமைத்தார். அந்த படத்தில்  வரும் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வாரியா பக்கா மாஸ்… அதேபோன்று அட என்னாத்த சொல்வேனுங்க பாடலும் அனைவரது செல்போன்களிலும் இடம்பிடித்த பாடலாகவே அமைந்தது. 

vidyasagar

இதையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி, ஆதி, குருவி, காவலன் ஆகிய படங்களுக்கு மெட் போட்டவர் நம்ம வித்தியாசகர்தான். முக்கியமாக கில்லி படமும், பாடலும் விஜயின் திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முனையாகவே அமைந்தது என்றால் அது மிகையாகது. அப்படி போடு போடு போடு பாடல்…. அர்ஜுனரு வில்லு அரிசந்திரன் சொல்லு  இவனோட தில்லு பொய்க்காது… ஆகிய பாடல்கள் ரசிகர்கள் தியேட்டரை வந்த பின்னும் ஆட்டம் போட வைத்த பாடலாக அமைந்தது. 

s.a.rajkumar

காதல் படங்கள் மட்டுமின்று குடும்ப படங்களுக்கேற்ப பாடல்களை இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார். பூவே உனக்காக படத்தில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடும்…. துள்ளாத மனமும் துள்ளும் இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ஆகிய பாடல்கள் பேமிலி பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட் சாங்க்ஸ். தமிழன், ஜில்லா ஆகிய படங்களில் டி. இமான் இசை கலக்கியது. குறிப்பாக எப்ப மாமா மாமா ட்ரீட்டு…. எங்க மாமா மாமா ட்ரீட் மற்றும் கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொன்னு ஆகிய பாடல்கள் பக்கா மாஸ்… 

manisharma

விஜய்யும் மணிசர்மாவும் இணைந்த முதல் படம் ஷாஜகான். இந்த படத்தில் வரும் சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் பாடலும், அச்சச்சோ புன்னகை பாடலும் ரசிகர்கள் மத்தியில் முனுமுனுக்க வைத்தது. இதையடுத்து போக்கிரி, சுறா, யூத் ஆகிய படங்களுக்கு அவரே இசையமைத்தார். அதில் என் செல்லப்பேரு ஆப்பிள், மாம்பழமா மாம்பழம் பாடல் நல்ல ஹிட் அடித்தன. 

devi sri prasad

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த சச்சின், வில்லு, புலி ஆகிய மூன்று படங்களும், விஜய் ஆண்டனி இசையில்வந்த வேட்டைக்காரம், சுக்ரன் வேலாயுதம் ஆகிய மூன்று படங்களும் சுமாராக ஓடினாலும் பாடல்களுக்கு நல்லவரவேற்பு கிடைத்தது. அடுத்து இசைப்புயலின் இசையில் அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் வந்தன. மதுரைக்கு போகாத டி…. எல்லா புகழும் இறைவன் இறைவனுக்கே பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவையாக இருந்தன. இதையடுத்து மெர்சல் படத்தில் வரும் நீதானே பாடல் இன்றைய லவ்வர்ஸ்களின் ஃபேவரைட் பாடலாக வலம் வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நண்பன் படத்தில் வரும் என் பிரண்ட்ட போல யாரு மச்சான், கூகுள் கூகுள் பன்னிபார்த்தேன் ஆகிய பாடல்கள் எவர் கீரின் பாடல்களாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. 

gv

இதையடுத்து விஜயுடன் கைக்கோர்த்தவர் ஜி.வி.பிரகாஷ். தலைவா, தெறி ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்தார். ஈனா மீனா தேக்கா பாட்டும், உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே பாடலும் படத்தை நின்னு ஓட வைத்தது. அடுத்து ரஹ்மான் இசையில் வந்த மெர்சல் ஆளப்போறான் தமிழனை அடித்துக்கொள்ள ஆல் இல்லை.. இன்றும் பல விஜய் ரசிகர்களின் ரிங்டோனாக அதிருகிறது. இறுதியாக அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சர்கார் படத்திலும் இசைப்புயலே இசையமைத்தார். அதில் வரும் ஒரு விரல் புரட்சி பாடல் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவையாக இருந்தது. 

இசையும் விஜயும் பிரிக்கமுடியாத உறவில் இருந்தாலும்… விஜயின் ரசிகர்கள் அவரது பாடலை ஹிட் அடைய வைக்காமல் இருப்பதில்லை… அது விஜய்- இசையமைப்பாளர்- இயக்குநர் கூட்டணிகளின் ராசிதான் என்பதே நிதர்சனமான உண்மை…