படமே எடுக்கவில்லை என்றாலும் நான் அப்படித்தான் பேசுவேன்: பா.ரஞ்சித் ஓபன் டாக்!

 

படமே எடுக்கவில்லை என்றாலும் நான் அப்படித்தான் பேசுவேன்: பா.ரஞ்சித் ஓபன் டாக்!

 ‘4 திரைப்படங்கள் எடுத்துவிட்டதால் அதிகமாக பேசுகிறான் ரஞ்சித் என்று பலர் குறை கூறுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன். படமே எடுக்கவில்லை என்றாலும், அவ்வாறுதான் பேசி இருப்பேன்’ என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம் பொங்க கூறியுள்ளார்.

சென்னை: ‘4 திரைப்படங்கள் எடுத்துவிட்டதால் அதிகமாக பேசுகிறான் ரஞ்சித் என்று பலர் குறை கூறுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன். படமே எடுக்கவில்லை என்றாலும், அவ்வாறுதான் பேசி இருப்பேன்’ என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம் பொங்க கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அம்பேத்கரின் 62-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஜெய் பீம்’ என்ற முழக்கமிடும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு உரத்த குரல் கொடுத்து வருகிறேன். காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர். இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும்.பெரும் பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமே இருந்த ஓட்டு உரிமையைச் சேரி மக்களுக்கும் பெற்று தந்தவர் அம்பேத்கர். அதன் காரணமாகத் தான் வாக்கு கேட்பதற்காகவாவது சேரிக்குள் கால் வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்’ என்று தெரிவித்தார்.

‘4 திரைப்படங்கள் எடுத்துவிட்டதால் அதிகமாக பேசுகிறான் ரஞ்சித் என்று பலர் குறை கூறுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன். படமே எடுக்கவில்லை என்றாலும், அவ்வாறுதான் பேசி இருப்பேன். இது எனக்கு என் முன்னோர் சொல்லித் தந்தது’ என்று பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.