படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை செய்த காரியத்தை பாருங்க!

 

படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை செய்த காரியத்தை பாருங்க!

திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தியேட்டரில் நடிகை ராஷி கண்ணா டிக்கெட் விற்றது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இவர் தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தியேட்டரில் நடிகை ராஷி கண்ணா டிக்கெட் விற்றது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இவர் தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்த பிரதி ரோஜு பண்டகே என்ற படம் இன்று ரிலீஸ் ஆனது. பொதுவாக படத்தின் ப்ரமோஷனுக்காக தியேட்டரில் நடக்கும் நிகழ்ச்சி, டி.வி ஷோக்களில் திரைப்பட குழுவினர் பங்கேற்பது வழக்கம். ஆனால், ராஷி கண்ணா, தன்னுடைய படம் வெளியாகும் திரையரங்கில் டிக்கெட் விற்பனை செய்துள்ளார்.

Rashi-khanna-selling-tickets
டிக்கெட் வாங்க வந்த இடத்தில் நடிகை ராஷி கண்ணாவைக் கண்ட ரசிகர்கள் குஷியாகினர். அவர் டிக்கெட் விற்கும் அழகை படம் எடுத்து தங்கள் சமூக ஊடக பக்கங்களில் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 




ராஷி கண்ணா டிக்கெட் விற்கிறார் என்ற தெரிந்ததும் நிறைய ரசிகர்கள் வந்து டிக்கெட் வாங்கியுள்ளனர். ராஷி கண்ணாவின் இந்த ப்ரமோஷன் விற்பனை திரைப்பட குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.