பஞ்சமா பாதகச் செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ன்னுதான் கோஷம் போடுகிறார்கள்…இயக்குனர் அமீர்! 

 

பஞ்சமா பாதகச் செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ன்னுதான் கோஷம் போடுகிறார்கள்…இயக்குனர் அமீர்! 

முஸ்லிம் கவிஞரும்,இஸ்லாமிய மெய்யியலாளரும், சர் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது.இதை கவிஞர் மு.மேத்தா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ameer

முஸ்லிம் கவிஞரும்,இஸ்லாமிய மெய்யியலாளரும், சர் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது.இதை கவிஞர் மு.மேத்தா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தாஜ்நூர் இசையில் நித்யஸ்ரீ மகாதேவன் பாடிஇருக்கிறார்.சிங்கைத் தமிழரான எம்.ஏ.முஸ்தபா தயாரித்திருக்கிறார்.இந்தப் பாடல் வெளியீட்டுக்கு வந்திருந்த இயக்குனர் அமீரின் பேசும்போது.. 

song

“இந்த விழாவுக்கு கிளம்பும்போது இந்தியத் தாயை வாழ்த்தக்  கிளம்பிட்டிங்க போல…! அப்படின்னா  தமிழ் தேசியம் என்னாச்சுன்னு நண்பர்கள்  சிலர் கேட்டாங்க, நானும் இந்தியத்தாயின் பிள்ளையாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன்.பாரத மாதாவின் காலடியில் இருக்கிறோம் என்றாலும் தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்பது போல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை! ஆனால் முகத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை காலுக்கு கொடுப்பதில்லை! பாரத மாதாவின் காலாக இருக்கும் தமிழகத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் கால் இல்லாமல் வாழவே முடியாது என்பதை மறந்து விடுகின்றனர்.

song release

இன்று செய்வதற்கே அஞ்சுகின்ற பஞ்சமா பாதகச்செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.தேசத்தை நேசிக்காமல் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செல்லும் அவர்களை விட, இந்த தேசத்தை யார் உண்மையாக நேசிக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். 
 
இந்த பாடல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின்  எண்ணமாகவும்  தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என” என்றார்