பஜாஜ் பல்சர் 150சிசி பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

 

பஜாஜ் பல்சர் 150சிசி பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்

பஜாஜ் பல்சர் 150சிசி பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை: பஜாஜ் பல்சர் 150சிசி பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் பல்சர் 150சிசி பைக்கின் பி.எஸ்.6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒரு டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில்) முதல் தொடங்குகிறது. புதிய பஜாஜ் பல்சர் 150சிசி மாடலில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீரான செயல்திறன் மற்றும் கூடுதல் சிக்கனமான எரிபொருள் பயன்பாட்டை இந்த பைக்கின் என்ஜின் வழங்கும். மேலும் இதை பராமரிப்பதும் எளிதான விஷயம் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ttn

இந்த பைக்கின் சிறப்பம்சங்களாக 149.5சிசி சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக், SOHC DTS-i என்ஜின், 13 பி.ஹெச்.பி பவர், 13.25 என்.எம் டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன்புறம் 31 எம்.எம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் கேஸ் ஃபில் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260 எம்.ம். டிஸ்க், பின்புறம் 130 எம்.எம். டிரம்/டிஸ்க், 80/100-R17 டியூப்லெஸ் டயர், பின்புறம் 100/90-R17 டியூப்லெஸ் டயர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. புதிய பஜாஜ் 150சிசி பைக் பிளாக் குரோம் மற்றும் பிளாக் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.