பஜாஜ் கியூட் கார்; அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 

பஜாஜ் கியூட் கார்; அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே தில்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த காரை பஜாஜ் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது

புதுதில்லி: பஜாஜ் நிறுவனத்தின் குறைந்த விலை காரான ‘கியூட்’-ன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

குவாட்ரி சைக்கிள் எனப்படும் நான்கு சக்கரங்களைக் கொண்ட, குறைந்த விலையிலான சிறிய ரக கார்களை பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தது. அந்த காருக்கு ‘கியூட்’ எனவும் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே தில்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த காரை பஜாஜ் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால், இதற்கான அனுமதி இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

bajaj qute

இதையடுத்து, குவாட்ரி சைக்கிள் எனப்படும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சிறிய ரக கார்களுக்கு நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் நீதிமன்றம் உத்தரவின் படி, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் இதற்கான அனுமதியை கடந்த ஆண்டில் அளித்தது. இந்த வகையான சிறியரக கார்களுக்கான எடை, அதன் வேகம் மற்றும் என்ஜின் திறன் ஆகிய கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டுள்ளன.

இதனால், பஜாஜ் நிறுவனத்தின் கியூட் கார்கள் விரைவில் சாலைகளில் வலம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகிற 18-ம் தேதி பஜாஜ் நிறுவனத்தில் கியூட் கார், விற்பனைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

bajaj qute

வெளிப்புறத்தில் ஆட்டோ ரிக்ஷா-வை போன்ற வடிவமைப்பு கொண்ட குவாட்ரி சைக்கிள் எனப்படும் நான்கு சக்கரங்களை கொண்ட இந்த காரின் உள்புறம், ஸ்டீரிங் உள்ளிட்டவைகளை காரின் தோற்றத்தைக் கொண்டதாக இருக்கும். ஓட்டுநர் உள்பட நான்கு பேர் இதில் பயணிக்க முடியும். இதன் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள என்ஜின் சிஎன்ஜி அல்லது பெட்ரோலில் இயங்கும் வகையிலானது. இரண்டையும் சேர்த்து பயன்படுத்த முடியாது. அதன் திறன் 216 சிசி கொண்டது. 5 கியர்கள் உள்ளன.

bajaj qute

அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ. இந்த கார் ஒற்றை சிலிண்டர் கொண்ட நான்கு ஸ்டிரோக் என்ஜினை கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 36 கி.மீ தூரம் மைலேஜ் தரக்கூடியது என கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் ஓட்டுவதற்கு வசதியான இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனின் விலை ரூ.2.64 லட்சம் ஆகும்.

இதையும் வாசிங்க

100 வருடம் முன்பு ரயில் பயணம் எப்படி இருந்தது தெரியுமா?!