பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி – மத்திய அரசு!

 

பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி – மத்திய அரசு!

ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.டாஸ்மாக் மதுக் கடைகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில், மே 3ம் தேதிக்குப் பிறகும் அதை திறக்காமல் அப்படியே மூடிவிடலாம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 100 கோடி, ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால் அதனை மூடவாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்டது

டாஸ்மாக்

இந்நிலையில் பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும் ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது என்றும் நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது.