பச்சை புளி சாதம் | ஆடி 18ம் பெருக்கு ஸ்பெஷல் 

 

பச்சை புளி சாதம் | ஆடி 18ம் பெருக்கு ஸ்பெஷல் 

ஆடி 18ம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக்கு மசக்கை என்பது ஐதீகம். புதுப் புனலாக பொங்க வரும் காவிரி ஆற்றுக்கு கலந்த சாதம் செய்து எடுத்துச் சென்று நிவேதனம் செய்வது வழக்கம். அதிலும் உப்பும், உழைப்பும், புளிப்புமாக செய்து பச்சை புளிசாதம் வழிபடுவது மிகவும் விசேஷம்.

ஆடி 18ம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக்கு மசக்கை என்பது ஐதீகம். புதுப் புனலாக பொங்க வரும் காவிரி ஆற்றுக்கு கலந்த சாதம் செய்து எடுத்துச் சென்று நிவேதனம் செய்வது வழக்கம். அதிலும் உப்பும், உழைப்பும், புளிப்புமாக பச்சை புளிசாதம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷம்.

tamarind rice

தேவையான பொருட்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
சிவப்பு மிளகாய்    -5
கடுகு  – 1ஸ்பூன்
வெந்தயம்   -1ஸ்பூன்
வேர்க்கடலை – 50கிராம்
நல்லெண்ணெய்    – 100மிலி
பெருங்காயத்தூள்   – 1ஸ்பூன்
தனியா                  – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு     – 1டீஸ்பூன்

செய்முறை

tamarind rice

முதலில் புளியை கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காயும் போது கடுகு போடவும். கடுகு வெடித்ததும் அதில் மிளகாயை போட்டு நன்கு சிவக்க வறுத்து விடவும். கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விடவும். வேறொரு வாணலியில் தனியா, கடலை பருப்பு மற்றும் இரண்டு சிவப்பு மிளகாயை சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். புளி நன்கு கொதித்து இறுகும் போது இந்த பொடியை தூவி  இறக்கி உப்பு சேர்த்து சாதத்தைக் கொட்டி சேர்த்து கிளறினால் பச்சை புளி சாதம் தயார்.