பச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு…செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்!

 

பச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு…செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்!

கடந்த ஐந்து, ஆறு நாட்களாக ஆற்றின் நிறம் பச்சையாக மாறியுள்ளது. மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம்

ஷிவமோகா: துங்கா நதிக்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கும் மீன்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கா ஆறு, கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீரை வழங்கி வருவதுடன் பாசனத்துக்கும் உதவி வருகிறது. பத்ரா ஆற்றுடன் இணையும் துங்கா ஆறு, கர்நாடகத்தின் மத்திய பகுதி வரை பாய்ந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை கொடுப்பதுடன், லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வருகிறது.

tunga river

இந்நிலையில், ஷிவமோகா மாவட்டம் மட்டுறு-ஹோசஹள்ளி கிராமங்களில் பாயும் துங்கா நதிக்கிளையில், ஆற்றின் நிறம் பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது. அத்துடன், மீன்களும் உயிரிழந்து கரை ஒதுங்குவதால் குடிநீர் உள்ளிட்ட இதர தேவைகளுக்கு ஆற்றின் நீரை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

tunga river

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், கடந்த ஐந்து, ஆறு நாட்களாக ஆற்றின் நிறம் பச்சையாக மாறியுள்ளது. மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்து தண்ணீரின் மாதிரிகளையும், உயிரிழந்த மீன்களையும் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உதவிகள் செய்யப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க

கடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ!