பச்சை நிறத்தில் காணப்படும் மேட்டூர் அணை : செத்து மிதக்கும் மீன்கள்.. அச்சத்தில் பொதுமக்கள்!

 

பச்சை நிறத்தில் காணப்படும் மேட்டூர் அணை : செத்து மிதக்கும் மீன்கள்.. அச்சத்தில் பொதுமக்கள்!

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து 3 முறை முழுக் கொள்ளளவை எட்டியது. ஒரே ஆண்டில் 4 முறை மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது இதுவே முதன் முறையாகும்.

ttn

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

tttm

இந்நிலையில், அணையின் 16 கண் மதகுகள் அருகே இருக்கும் நீர் அடர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த நீர் அந்த பகுதியில் உள்ள குட்டைகளுக்குச் செல்வதால் அங்கு இருக்கும் மீன்கள் செத்து மிதந்து கிடக்கின்றன. அதுமட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த நீரை ஆய்வு மேற்கொண்டு இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.