பச்சையும், மஞ்சளும் கலந்த புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் அறிமுகம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 

பச்சையும், மஞ்சளும் கலந்த புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் அறிமுகம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது

மும்பை: புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

rupees

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

rs100 note

இதனையடுத்து, புதிய ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளை ரிசர்வ வங்கி வெளியிட்டது. அதேசமயம், இந்த மதிப்புடைய பழைய நோட்டுகளும் செல்லத்தக்தாகவே உள்ளன.

இந்நிலையில், புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும் இந்த நோட்டுகள் தற்போதைய ரிசர்வ் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் வரவுள்ளது.

rs 20 note

நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய ரூ.20 நோட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.