‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்

 

‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்

செட்டிநாடு உணவு  என்றாலே  வெரைட்டிக்கு  பஞ்சமே  இருக்காது !தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும்  ஒருவகை  உணவுகள் சிறப்பாக இருக்கும்.

செட்டிநாடு உணவு என்றாலே வெரைட்டிக்கு  பஞ்சமே  இருக்காது!  தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும்  ஒருவகை  உணவுகள் சிறப்பாக இருக்கும். சில  ஏரியாக்களில் மேலும் சிலவகை என எண்ணிக்கை கூடும்..ஆனால்  செட்டிநாட்டு உணவுகளின் பட்டியல் வெகு நீளமானது.அதில் ஒன்றுதான் ‘பச்சை மிளகாய் மண்டி’ இதை  சூடான சாதத்திற்கு  சேர்த்து சாப்பிடலாம் .செம  டேஸ்ட்டாக இருக்கும்..குழந்தைகள்  மிகவும் விரும்பி  சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

receipe

பச்சை மிளகாய் – 150 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
உ. பருப்பு
பெருங்காயம்
கடுகு

செய்முறை:

குக்கரை எடுத்து துவரம் பருப்பு போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக விடவும்.பிறகு சின்ன வெங்காயத்தை முழுசாக  போடவும். பச்சைமிளகாயை பாதியாக நறுக்கவும்,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து உளுந்தம் பருப்பு பெருங்காயம் கடுகு ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.

millakai mandi

அத்துடன் சின்ன வெங்காயம் பச்சைமிளகாயை வதக்கி வெந்த பருப்புடன் சேர்த்து புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்து கெட்டியாக வந்தவுடன் இறக்கவும்.சுவையான காரசாரமான பச்சைமிளகாய் மண்டி ரெடி!!!!

இதையும் படிங்க: அநியாய குளிர்ச்சியைத் தரும் அட்டகாசமான ‘நுங்கு பாயாசம்’!