பச்சிளம் குழந்தைக்காக அலறிய நூற்றுக்கணக்கான சைரன்கள்! தேனி டூ கோவை நெகிழ்ச்சி!

 

பச்சிளம் குழந்தைக்காக அலறிய நூற்றுக்கணக்கான சைரன்கள்! தேனி டூ கோவை நெகிழ்ச்சி!

தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிற்பகல் 3.15 மணிக்கு ஓட்டுநர் ஜாபர் அலி ஆக்சிலேட்டரில் வைத்தகாலை, சரியாக 6.10க்கு கோவை தனியார் மருத்துவமனையில் நுழைந்தபின்னர்தான் எடுத்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலம்.

தேனியைச் சேர்ந்த ஆனந்த் சாமி மற்றும் ஆர்த்தி தமபதியினரின் 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படவே, பாலகனை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் ’மூச்சுக்குழாயில் அடைப்பு உள்ளதால் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, எனவே, மேல்சிகிச்சைக்காக உடனடியாக கோவைக்கு அழைத்து செல்லவும், இன்குபேட்டர் வசதிகொண்ட ஆம்புலன்ஸில் குழந்தையை அழைத்து செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர். உடனடியாக களத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார், கேரளாவிலிருந்து சிறப்பு ஆம்புலன்ஸை உடனடியாக தேனி வரவைக்க, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி, மருத்துவ உதவியாளர் அஸ்வின்சந்த் ஆகியோர் தயாராக இருக்கிறார்கள்.
 

Ambulance Team

240 கிலோமீட்டர் தொலைவை கடக்க வழக்கமாக நான்கு முதல் 5 மணி நேரங்களாவது ஆகுமல்லவா? தேனி டூ கோவை வழிநெடுகிலும் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அவரவர் ஆம்புலன்ஸ்கள்மூலம் சைரன்களை அலறவிட்டு வழி ஏற்படுத்தித்தர, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை என நான்கு மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த, இவர்கள் அனைவரையும் ‘தமிழ்நாடு ஆம்புலன்ஸ்’ வாட்சப் குழு ஒருங்கிணைக்க, தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிற்பகல் 3.15 மணிக்கு ஓட்டுநர் ஜாபர் அலி ஆக்சிலேட்டரில் வைத்தகாலை, சரியாக 6.10க்கு கோவை தனியார் மருத்துவமனையில் நுழைந்தபின்னர்தான் எடுத்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலம். யாவரும் நலம்.