பசு மாடுகளுக்கு இலவச ஸ்வெட்டர்! பாஜகவின் மெகா ப்ளான்! 

பசு மாடுகளுக்கு இலவச ஸ்வெட்டர்! பாஜகவின் மெகா ப்ளான்! 

நம்மூரில் மட்டும் தெர்மாக்கோல் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று நமது விதியை நொந்துக் கொண்டிருந்தோம். நமக்கு ஆறுதல் தரும் வகையில் நாடு முழுவதுமே இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.  குளிர் காலம் துவங்கி விட்டதால், குளிரில் இருந்து பசு மாடுகளைக் காப்பாற்றுவதற்காக ஸ்வெட்டர், கம்பிளி, மாடுகளுக்கு கையுறைகளை வாங்குவதற்காக கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது அயோத்தி நகராட்சி நிர்வாகம்.

பாஜக ஆட்சியில் இருக்கும் அயோத்தியில், இப்படி பலே திட்டங்களை வகுத்து, செயல்படுத்தவும் துவங்கியிருக்கிறார்கள்.

cows

பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் பைசிங்பூரில் இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 1,200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பிளி, கையுறைகளை வாங்குவதற்காக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். இவை அந்த நகரில் இருக்கும் பசு மாடுகளுக்கும், காளைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.  கடும் குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் கொடுப்பதைப் பற்றி யோசிக்காத மாநில அரசு, மாடுகளுக்கு ஸ்வெட்டர் தருகிறது என்று காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.