பசுவை தொடுவதால் நமக்குள் இருக்கும் எதிர்மறை விரட்டப்படும்… காங்கிரஸ் பெண் அமைச்சர் திடீர் பேச்சு

 

பசுவை தொடுவதால் நமக்குள் இருக்கும் எதிர்மறை விரட்டப்படும்… காங்கிரஸ் பெண் அமைச்சர் திடீர் பேச்சு

பசுவை தொடுவதால் நமக்குள் இருக்கும் எதிர்மறை விரட்டப்படும் என பா.ஜ.க. உறுப்பினர் போல் மகாராஷ்டிரா காங்கிரஸ் பெண் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.யான யசோமதி தாகூர்.

யசோமதி தாகூர்

மும்பையிலிருந்து சுமார் 700 கி.மீட்டர் தொலைவில் உள்ள அமராவதியில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யசோமதி தாகூர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பசுவை தொடுவதால் நமக்குகள் இருக்கும் அனைத்து எதிர்மறையும் வெளியே சென்று விடும் என நமது கலாச்சாரம் கூறுகிறது என தெரிவித்தார். பா.ஜ.க. உறுப்பினர் போல் அமைச்சர் யசோமதி தாகூர் பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ்

மகாராஷ்டிரா அமைச்சர் யசோமதி தாகூர் இது போன்ற அதிரடி கருத்துக்களை இது ஒன்றும் முதல் முறையல்ல. அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட யசோமடி தாகூர் பேசுகையில், எங்களது அரசு இப்போது வரை ஆட்சியில் இல்லை. ஆனால் நான் மாநில அமைச்சராக பதவியேற்றேன். நாங்கள் இன்னும் எங்களது பாக்கெட்டை நிரப்பவில்லை என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.