பசும் பாலில் தங்கம் இருக்குல்ல… அப்ப லோன் கொடுங்க! அதிர வைத்த விவசாயி!! 

பசும் பாலில் தங்கம் இருக்குல்ல… அப்ப லோன் கொடுங்க! அதிர வைத்த விவசாயி!! 

மேற்கு வங்க பாஜக தலைவர் பசும் பாலில் தங்கம் இருப்பதாக கூறியதையடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுடன் வந்து லோன் கேட்ட சம்பவம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க பாஜக தலைவர் பசும் பாலில் தங்கம் இருப்பதாக கூறியதையடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுடன் வந்து லோன் கேட்ட சம்பவம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “பசும் பாலில் தங்கம் இருப்பதாகவும், பசுங்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இதனால் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். 

BJP leader

இதனைக்கேட்ட அம்மாநிலத்தின் தன்குனி பகுதியில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு ஒரு விவசாயி, தனது மாட்டுடன் வந்தார். பாலில் தங்கம் இருப்பதாக பாஜக தலைவரே கூறியிருக்கிறார். எனவே பால் என்ன பால்… இந்தாங்க பசுவையே வைத்துக்கொள்ளுங்கள்! எனக்கு தங்கக் கடன் கொடுங்க! எனகேட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  `தங்கப்பால்’ குறித்த கண்டுபிடிப்புக்காக திலிப் கோஷுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.