பசுக்களை பாதுகாக்க எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி! – உ.பி அரசு முடிவு

 

பசுக்களை பாதுகாக்க எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி! – உ.பி அரசு முடிவு

பசுக்களைப் பாதுகாக்க உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக சட்ட திருத்தத்தை  யோகி ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பசுக்களைப் பாதுகாக்க உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக சட்ட திருத்தத்தை  யோகி ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
வட இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க-வினர் மத்தியில் பசுக்களை தெய்வமாக வணங்கும் பழக்கம் உள்ளது. இதனால், பசுக்கள் பாதுகாப்பு என்று கூறி பொது மக்களை அடித்துக் கொன்ற சம்பவங்கள் பல நடந்தன. உத்தரப்பிரதேச அரசு பசுக்கள் பாதுகாப்புக்கு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பசுக்களுக்கு ஆம்புலன்ஸ், குளிர் காலத்தில் பாதுகாப்பு மையம் என்று உ.பி அரசு தொடர்ந்து பசுக்கள் பாதுகாப்புக்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

up-cm

இந்த நிலையில் பசுக்கள் பாதுகாப்புக்கு எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த அனுமதிப்பது என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. உ.பி மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பசுக்களை பாதுகாக்க மிகப்பெரிய நிதியை ஒதுக்கினார். ஆனால், பொது மக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே நிதியை ஒதுக்க முடியும் என்று கூறி அவரது ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் இதற்கான அறிவிப்பு மே 13ம் தேதி வெளியாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அம்மாநில பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர் மனோஜ் குமார் சிங் கூறுகையில், “2020-21 முதல் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பசுக்கள் பாதுகாப்புக்கு செலவு செய்யலாம். பசுக்கள் தங்க இடம், சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கலாம். ஆனால், தனியார் பராமரிக்கும் கோசாலைகளுக்கு நிதி ஒதுக்க முடியாது” என்றார்.