பசி கொடுமை… மண்ணை அள்ளித்தின்ற மகன்… கேரளாவை உலுக்கிய தாய்!

 

பசி கொடுமை… மண்ணை அள்ளித்தின்ற மகன்… கேரளாவை உலுக்கிய தாய்!

கேரளா என்றாலே செழிப்பான பூமி, அதிகம் படித்த, சுகாதாரம் உள்பட எல்லாவற்றிலும் முன்னோடியான மாநிலம், அமைதியான மக்கள்தான் மனதில் தோன்றும்… ஆனால், பசிக் கொடுமை காரணமாக தாய் ஒருவர் மேற்கொண்ட செயல் கேரள மக்களை உலுக்கியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகே தகர ஷெட்டில் வாழ்ந்து வருபவர் ஶ்ரீதேவி. கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

கேரளா என்றாலே செழிப்பான பூமி, அதிகம் படித்த, சுகாதாரம் உள்பட எல்லாவற்றிலும் முன்னோடியான மாநிலம், அமைதியான மக்கள்தான் மனதில் தோன்றும்… ஆனால், பசிக் கொடுமை காரணமாக தாய் ஒருவர் மேற்கொண்ட செயல் கேரள மக்களை உலுக்கியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகே தகர ஷெட்டில் வாழ்ந்து வருபவர் ஶ்ரீதேவி. கணவர் கூலி வேலை செய்து வருகிறார். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்துவிட்டு வருவதால் வீட்டில் சமைக்க ஒன்றும் இல்லை. இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். சில தினங்களுக்கு முன்பு பசி கொடுமை காரணமாக பெரிய மகன் மண்ணை அள்ளித் தின்றது ஶ்ரீதேவியின் மனதை பாதித்தது. இதைத் தொடர்ந்து அவர் செய்த செயல் தற்போது கேரளாவில் ஹாட் டாப்பிக்.

drinking

தெரிந்தவர்களிடம் விசாரித்து குழந்தைகள் நல அலுவலகத்தைக் கண்டுபிடித்து சென்றுள்ளார். கையில் ஒரு குழந்தை என மொத்தம் ஆறு குழந்தைகளுடன் சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தபோது அலுவலகமே அவரை ஒருமாதிரியாகத்தான் பார்த்தது. கோரிக்கை மனுவை படித்த அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்.
“எனக்கு ஆறு குழந்தைகள். குழந்தைகளுக்கு சாப்பிட என்னால் எதையும் கொடுக்க முடியவில்லை. பசி மயக்கத்தில் சாப்பிட ஏதும் இல்லாத சூழலில் என்னுடைய மகன் மண்ணை அள்ளித் தின்றான். இதைப் பார்த்து என் நெஞ்சு பொறுக்கவில்லை. எனவே, என்னுடைய குழந்தைகள் ஆறையும் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அதில் அவர் எழுதியிருந்தார்.

poor

இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் ஶ்ரீதேவியை அழைத்துக்கொண்டு அவருடைய வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டில் ஒன்றுமில்லை, ஏழு மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகன்கள், நான்கு மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள், தாய்ப்பால் பருகும் இரண்டு குழந்தைகள் என ஆறு குழந்தைகளைக் கண்டு கண் கலங்கிவிட்டது. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தரப்பட்டது. கணவர் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் குடிகார கணவன் மீது புகார் அளிக்க அந்த பெண் மறுத்துவிட்டார். என்னுடைய குழந்தைகள் காப்பகத்திலிருந்தாலும் பரவாயில்லை, வயிறார சாப்பிடுவார்களே எனக்கு அதுபோதும் அந்த ஒரு உதவியை மட்டும் செய்தால் போதும் என்று கூறி அழுதுள்ளார்.
இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகவே, மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெரிய பிள்ளைகள் மூன்று பேரை மட்டும் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மீதி மூன்று குழந்தைகள் தாயிடமே இருக்கட்டும் என்று கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் அதிகாரிகள். “குழந்தைகளை விடுதியில் அனுமதித்தது தற்காலிகமானதுதான், ஶ்ரீதேவி எப்போது விரும்பினாலும் தன்னுடைய பிள்ளைகளை வந்து பார்க்கலாம், இனி தன்னால் வளர்க்க முடியும் என்று முடிவெடுத்தால் குழந்தைகளை தாராளமாக அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், கல்வி வழங்கப்படும்” என்று குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

kid

இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஶ்ரீகுமார் அந்த பெண்ணுக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏழை மக்களுக்காக கட்டித்தரப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்த குடும்பத்திற்கு வீடு ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளார். 
கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக கேரளா உள்ளதாக சமீபத்தில்தான் மத்திய அரசின் நிட்டிஆயோக் அறிவித்திருந்தது. ஆனால் கேரளாவில் அதுவும் தலைநகரிலேயே ஒரு குடும்பம் வாழ வழியின்றி அவதியுற்ற சம்பவம் கேரள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அவருக்கு உதவ பலரும் முன்வந்துள்ளனர்.