பசியின்மையை போக்கும் இஞ்சிப் பூண்டு தொக்கு!!

 

பசியின்மையை போக்கும் இஞ்சிப் பூண்டு தொக்கு!!

அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது

பசியின்மை, வயிறு மந்தம், வயிற்று கோளாறுகள் ஆகியவற்றிற்கு கைகண்ட மருந்து இந்த இஞ்சிப் பூண்டு தொக்கு. இந்த தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள் – ஒரு கிண்ணம், 
உரித்த பூண்டு – ஒரு கிண்ணம், 
காய்ந்த மிளகாய் – 10, 
புளி – எலுமிச்சை அளவு, 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
உப்பு – தேவையான அளவு, 
வெல்லம் – சிறு உருண்டை, 
நல்லெண்ணெய் – அரை கிண்ணம், 
கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். 

இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கைவிடாமல் கிளறவும். 

சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

சூப்பரான இஞ்சிப் பூண்டு தொக்கு ரெடி.

மருத்துவப் பலன்கள்: அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது