பசிஃபிக் கடலுக்குள் கசியும் பயங்கரம்… அணுக்கழிவு அபாயத்தை எப்படித் தடுக்கப்போகிறது அமெரிக்கா?!

 

பசிஃபிக் கடலுக்குள் கசியும் பயங்கரம்… அணுக்கழிவு அபாயத்தை எப்படித் தடுக்கப்போகிறது அமெரிக்கா?!

ரஷ்யாவுடனான பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பத்தாண்டுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் நடத்திய இடம்,பசிஃபிக் கடலில் பிலிப்பைன்ஸ் அருகிலிருக்கும் மார்ஷல் ஐலேண்ட்ஸ்!
அங்கே அமெரிக்கா பல்லாயிரம் டன் அணு கழிவுகளைப் புதைத்து வைத்திருக்கிறது.அந்த அணுக்கல்லறைக்குள் கடல் நீர் புகுந்தால் அந்த பகுதியில் இருக்கும் கோடிக்கணக்கா

ரஷ்யாவுடனான பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பத்தாண்டுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் நடத்திய இடம்,பசிஃபிக் கடலில் பிலிப்பைன்ஸ் அருகிலிருக்கும் மார்ஷல் ஐலேண்ட்ஸ்!அங்கே அமெரிக்கா பல்லாயிரம் டன் அணு கழிவுகளைப் புதைத்து வைத்திருக்கிறது.அந்த அணுக்கல்லறைக்குள் கடல் நீர் புகுந்தால் அந்த பகுதியில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களும் சுற்றுச்சூழலும் அழிவை சந்திக்க நேரிடும் என்று சூட்டைக் கிளப்பி இருக்கிறது ஒரு ஆஸ்திரேலிய தொலைக்காட்சி!.

nuclear

1954-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி,நேரம் காலை 6.45 மத்திய பசிஃபிக் கடலின் அடர் நீலவண்ன வானை கிழித்துக்கொண்டு கிளம்பியது ஒரு அதிபயங்கர வெடியோசையும் 5 மைல் உயரத்தீப்பிழம்பும்.அமெரிக்கா தனது முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு வெற்றி என்று அறிவித்தது. அதற்கு பத்து வருடம் முன்பு ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய ‘ லிட்டில் பாய்’ போல ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது இந்த வெடிகுண்டு என்றது அமெரிக்கா.

தாங்கள் எதிர்பார்த்ததை விட 2 1/2 மடங்கு சக்திவாய்ந்த வெடிப்பு என்று சொல்லி அதற்கு ” கேசில் ப்ரேவோ” என்று செல்லப்பெயரும் இட்டது அமெரிக்கா.சில மணி நேரத்திலேயே 7000 சதுரமைல் பரப்பளவில் வெண்ணிற சாம்பல் கொட்டியது.குழந்தைகள் அதில் விளையாடின.வாயில் போட்டு ருசியும் பார்த்தன.அத்தனையும், கதிர் வீச்சு அபாயமுள்ளவை.1980-களில் சுதந்திரமடைந்த மார்ஷல் ஐலேண்ட் பெயருக்குத்தான்  தனிநாடு. 

nuclear

அமெரிக்காவின் அசோசியேட் ஸ்டேட் அந்தஸ்த்தில்தான் இப்போதும் இருக்கிறது.மக்கள் தொகை வெறும் 53 ஆயிரம்தான்.பரப்பளவு 181 சதுரமைல். கப்பல் உடைப்பதுதான் பிரதானத் தொழில்.அடுத்தது சுற்றுலா.வரிய நாடு. அதன் தலையில் தான் அமெரிக்கா பல்லாயிரம் டன் அணுக்கழிவை கட்டிவிட்டுப் போய்விட்டது.

1948 முதல் 1954 வரை  43 அணு குண்டுகளை இங்கே வெடித்துச் சோதிதித்திருக்கிறது அமெரிக்கா.1977-ல் 4000 பேர்கொண்ட அமெரிக்க ராணுவ பிரிவு ஒன்று வந்திறங்கியது. அவர்கள் அணுக் கழிவுகளை அகற்றுவதில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.அவர்கள் அந்த தீவுப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து அணுக்கழிவுகளை திரட்டினார்கள்.

nuclear coffin

ரூனிட் தீவில் அவர்கள் அணுகழிவுகளுக்கு ஒரு கல்லரை கட்டினார்கள்.115 மீட்டர் விட்டமுள்ள அந்த குழியின் கொள்ளளவு 73000 கன மீட்டர்.அதில் சேகரித்த அணுக் கழிவுகளை கொட்டி கனமான காண்கிரீட்டால் மூடிவிட்டு போய் விட்டார்கள்.இந்த நாற்பதாண்டுகளில் புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து,இப்போது அந்த அணுக்கழிவு கல்லறை கடல் நீர் அரிப்புக்கு உட்பட்டு விட்டது.விரைவில் அதனுல் கடல் நீர் புகுந்தால் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.இதை இடமாற்றம் செய்து , பாதுகாப்பாக இன்னொரு இடத்தில் புதைக்கும் தொழில் நுட்பமோ, பொருளாதார வலிமையோ இல்லாத நாடு மார்ஷல் ஐலேண்ட். என்ன செய்யப் போகிறது அமெரிக்கா,என்பதை உலகமே உயிரை கையில் பிடித்தபடி பார்த்துக்கொண்டு இருக்கிறது!