பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதும், ரூ.35 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்……

 

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதும், ரூ.35 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்……

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 25ம் தேதி) பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

கடந்த வாரம் பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்பட்டதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். மேலும் இந்த வார தொடக்கத்தில் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான எந்தவொரு தகவல்களும் வரவில்லை. இதனால் முதல் 3 வர்ததக தினங்களில் பங்கு வர்ததக் சரிவை சந்தித்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாளான நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுவென ஏற்றம் கண்டது. அதேசமயம் ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட  நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.85 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதாவது கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தை

கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்த கடந்த 4 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.40 புள்ளிகள் குறைந்து 41,575.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 26 புள்ளிகள் வீழ்ந்து 12,245.80 புள்ளிகளில் முடிவுற்றது.