பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்த டி.சி.எஸ்.! ரூ.2,944 கோடி லாபம் பார்த்த எச்.சி.எல்.!

 

பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்த டி.சி.எஸ்.! ரூ.2,944 கோடி லாபம் பார்த்த எச்.சி.எல்.!

டி.சி.எஸ். நிறுவனம் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) பங்கு ஒன்றுக்கு ரூ.5 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ். 2019 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.8,118 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 0.2 சதவீதம் மட்டுமே அதிகமாகும். மேலும், கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தின் வருவாய் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.39,854 கோடியாக உயர்ந்துள்ளது.

டி.சி.எஸ்.

டி.சி.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. டிவிடெண்ட் பதிவுக்கான நாள் 2020 ஜனவரி 25 என்றும், பேமெண்ட் நாள் ஜனவரி 31ம் தேதி என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

நாட்டின் 3வது பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ், கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,944 கோடி ஈட்டியுள்ளது. மேலும், அந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 15.5 சதவீதம் அதிகரித்து ரூ.18,135 கோடியாக உயர்ந்துள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்று ரூ.2 டிவிடெண்ட் அறிவித்துள்ளது.