பங்குச் சந்தையில் காளையின் ராஜ்ஜியம்! சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்தது

 

பங்குச் சந்தையில் காளையின் ராஜ்ஜியம்! சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக காணப்பட்டது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இது போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.டி.சி., பார்தி ஏர்டெல், சன்பார்மா மற்றும் இன்போசிஸ் உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், யெஸ் பேங்க், மாருதி, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி. மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஸ்டேட் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,385 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,118 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.29 லட்சம கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.05 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 220.03 புள்ளிகள் உயர்ந்து 40,051.87 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 57.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,844.10 புள்ளிகளில் முடிவுற்றது.